அமெரிக்க எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவிக்க ட்ரம்ப் முடிவு !

Donald Trump United States of America World
By Shalini Balachandran Jan 20, 2025 08:19 PM GMT
Report

அமெரிக்காவின் (United States) 47 ஆவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), அமெரிக்காவின் தென் எல்லை பகுதிகளில் தேசிய அவசரநிலையை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden)  நிர்வாகத்தின் கொள்கைகளை விரைவாக மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட நிர்வாக உத்தரவுகளின் ஒரு பகுதியாகவே இவ்விடயம் பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி பொறுப்புக்கு வந்ததும் டொனால்ட் ட்ரம்ப், முதல் நாளிலேயே 100 நிர்வாக உத்தரவுகளுக்கு கையெழுத்திடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் டிரம்ப் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உலக பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் டிரம்ப் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உத்தியோகப்பூர்வமாக பதவி

தனது திட்டங்களின் ஒரு பகுதியாக, அமெரிக்க மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கான கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கவும் ட்ரம்ப் உத்தரவிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவிக்க ட்ரம்ப் முடிவு ! | Trump Decides Declare National Emergency Us Border

தேர்தல் பரப்புரையின் போதே, ஜோ பைடனின் வெளிப்படையான எல்லை கொள்கைகளை ரத்து செய்ய இருப்பதாக ட்ரம்ப் உறுதி அளித்திருந்தார்.

டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றதும் எடுக்க திட்டமிட்டிருக்கும் டசின் கணக்கான நிர்வாக உத்தரவுகளை ட்ரம்பின் நிர்வாக அதிகாரிகள் கோடிட்டுக் காட்டியுள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளை பரிசளித்த போர் : மீண்டும் உயிர்த்தெழும் காசா...

இடிபாடுகளை பரிசளித்த போர் : மீண்டும் உயிர்த்தெழும் காசா...

பாதுகாப்பு நடவடிக்கை

அத்தோடு, பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வர ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் இனி அமெரிக்க குடிமக்களாகக் கருதப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எல்லையில் தேசிய அவசரகால அறிவிப்பின் ஒரு பகுதியாக, எல்லையை மூட பாதுகாப்புத் துறையை ட்ரப் அறிவுறுத்துவார் எனவும் அத்துடன் எல்லையில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

அமெரிக்க எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவிக்க ட்ரம்ப் முடிவு ! | Trump Decides Declare National Emergency Us Border

முன்னதாக, பதவியேற்ற முதல் நாளிலேயே கனடா (Canada), மெக்சிகோ (Mexico) மற்றும் சீனாவிலிருந்து (China) அமெரிக்காவிற்குள் ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

ஆனால், பதவியேற்பு நாளில் புதிய வரி விதிப்பு எதுவும் அறிவிக்கப்படாது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழில் முனைவோருக்கான வாய்ப்பு : பிரித்தானியா - சுவிட்சர்லாந்தின் புதிய ஒப்பந்தம்

தொழில் முனைவோருக்கான வாய்ப்பு : பிரித்தானியா - சுவிட்சர்லாந்தின் புதிய ஒப்பந்தம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்