சர்ச்சைக்கு மத்தியிலும் டொனால்ட் டிரம்பிற்கு பெருகும் ஆதரவு! வெளியானது காரணம்
தொடர்ந்து பல சர்ச்சைகளில் டொனால்ட் டிரம்ப் சிக்கினாலும் அவருக்கான ஆதரவு அமெரிக்க மண்ணில் பெருகிக்கொண்டே செல்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் (2024) இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் களமும், பிரசாரமும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இருபெரும் காட்சிகளில் இரு பெரும் துருவங்களாக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரப் இருவரும் போட்டியிடுகிறார்கள்.
நாட்டுப்பற்று அதிகம்
இதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய போதிலும் டிரம்ப் ற்கு மேலும் மேலும் ஆதரவு பெருகுவதற்கான காரணம் தற்போது வெளிவந்துகொண்டிருக்கிறது.
அந்தவகையில், நாட்டுப்பற்றை முக்கிய ஆயுதமாக டிரம்ப், கையில் எடுத்திருப்பது அவருக்கான ஆதரவினை பன்மடங்காக பெருக்கியுள்ளது.
உதாரணமாக அமெரிக்கா தான் உலக நாடுகளை வழிநடத்த முடியும் என்ற தொனியில் தான் டிரம்ப் பிரசாரம் செய்வார், அது நாட்டுப்பற்று அதிகம் இருக்கும் அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை செலுத்தும் இலகுவாக தங்கள் ஆதரவை அளிப்பார்கள்.
அடுத்து பழமைவாதிகளின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வதில் டிரம்ப் இற்கு நிகர் எவருமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும், குறிப்பாகப் புலம்பெயர்வைத் தடுக்க கடுமையான சட்டங்கள், மெக்சிக்சோ மக்கள் மீதான வெறுப்பு, குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பயங்கரவாதத்துடன் இணைத்துப் பேசுவது ஆகியவற்றுக்கு கண்டனம் கடுமையாக இருந்தாலும், அது பழமைவாதிகளை டிரம்ப் ஆதரவாளர்களாக மாற்றுகிறது.
வழக்குகளில் கைதான
சில வழக்குகளில் கைதான டிரம்ப் அவர் மீது விசாரணை மற்றும் விமர்சனங்களைக் கூட தனக்கான ஆதரவாக மாற்றுகிறார்.
"அதாவது அமெரிக்கா மீண்டும் முதன்மையான இடத்திற்குச் செல்லக் கூடாது என்று சிலர் விரும்புவதாகவும் அவர்களே திட்டமிட்டு அதிபர் தேர்தலில் தான் போட்டியிடக் கூடாது என்பதற்காக இப்படிச் செய்வதாகவும் விமர்சித்தார்" இதுவும் அவருக்கான ஆதரவை அதிகரித்தது.
அமெரிக்கப் பொருளாதார நிலை அந்நாட்டு மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவில் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாகவும், அங்கே வேலைவாய்ப்பின்மை முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்துள்ளதாகவும் பைடன் தரப்பில் சொல்லப்பட்டது.
ஆனால், பொதுமக்களுக்கு விலைவாசி உயர்வே மிகப் பெரிய சிக்கலாகத் தெரிகிறது. இதனால் வட்டி விகிதம் அதிகரிக்கும் நிலையில் இருப்பதால், மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இதனை சரியாக சுட்டிக்காட்டி தனக்கான ஆதரவை டொனால்ட் டிரம்ப் பெருக்கிக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்