ஈரானுக்கு ஒருவாரம் விடுமுறை அளித்துள்ள ட்ரம்ப்
கொல்லப்பட்ட ஈரானிய ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்காக ஈரானுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர நாளான இன்று கமேனியின் இறுதிச்சடங்குகளை ஈரான் அரசு தொடங்கியிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
ஈரானுக்கு ஒரு வாரம் விடுமுறை
மேலும், கமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ஈரானிய மக்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தெஹ்ரானில் திரண்டுள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளின்உருவங்கள் செதுக்கப்பட்டு வரலாற்று தலமாகக் கருதப்படும் மவுண்ட் ரஷ்மோரில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப், கமேனியின் இறுதிச்சடங்கிற்காக ஈரானுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
வெனிசுலாவை ஒரே நாளில் வீழ்த்தினோம்
இதுபற்றி, அவர் கூறியதாவது: வெனிசுலாவை நாங்கள் ஒரே நாளில் வீழ்த்தினோம், ஈரானை நாங்கள் கடுமையாக தாக்கினோம். அவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் எப்படியாவது சமரசம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். நாங்கள் நல்லவர்கள் என்பதால், இறுதிச் சடங்கிற்கு நாங்கள் ஒரு வாரம் கொடுத்துள்ளோம் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்