43 நாடுகளுக்கு எதிராக ட்ரம்பின் பாரதூர முடிவு: இலக்கு வைக்கப்பட்ட முக்கிய நாடுகள்!
43 நாடுகளின் குடிமக்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகம் பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்போது, குறித்த 43 நாடுகளும் மூன்று தனித்தனி குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அதில் முதலாவதாக அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படும் 11 நாடுகள் "சிவப்பு" பட்டியலாக பெயரிடப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோர் விசா
அவை ஆப்கானிஸ்தான், பூட்டான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகியவை என்று அமெரிக்க அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது குழு “செம்மஞ்சல்” பட்டியில் காணப்படுகிறது, இந்த நாடுகுளில் உள்ள குடிமக்கள் விசா பெறுவதற்கு கட்டாய நேரில் நேர்காணல்களுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அதில் பெலாரஸ், எரித்திரியா, ஹைட்டி, லாவோஸ், மியான்மர், பாகிஸ்தான், ரஷ்யா, சியரா லியோன், தெற்கு சூடான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியவை அடங்கும்.
இது சுற்றுலா மற்றும் மாணவர் விசாக்கள் மற்றும் பிற புலம்பெயர்ந்தோர் விசாக்களையும் பாதிக்கும், சில விதிவிலக்குகளுடன் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் நாடுகள் இலக்கு
மூன்றாவது குழுவில், பெலாரஸ், பாகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட மொத்தம் 26 நாடுகளின் அரசாங்கங்களுக்கு "60 நாட்களுக்குள் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றால்", அமெரிக்க விசா வழங்கலை பகுதியளவு இடைநிறுத்துவதற்கு பரிசீலிக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.
இந்தப் பட்டியல் பல வாரங்களுக்கு முன்பு வெளியுறவுத்துறையால் உருவாக்கப்பட்டதாகவும், அது வெள்ளை மாளிகையை அடையும் நேரத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை, பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மீதான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதல் ஆட்சி கால தடைகளை நினைவூட்டுவதாக கூறப்படுகிறது.
ட்ரம்பின் உத்தரவு
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கண்டறிய அமெரிக்காவில் அனுமதிக்க விரும்பும் எந்தவொரு வெளிநாட்டினருக்கும் தீவிர பாதுகாப்பு சோதனை நடத்த வேண்டும் என்று ஜனவரி 20 அன்று ட்ரம்ப் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவினால் பல அமைச்சரவை உறுப்பினர்களுக்கு, மார்ச் 21 ஆம் திகதி பயணம் ஓரளவு அல்லது முழுமையாக இடைநிறுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், ட்ரம்பின் இந்த உத்தரவு, அவரது இரண்டாவது பதவிக் காலத்தில் தொடங்கிய குடியேற்ற ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்