ஈரானின் கொலை அச்சுறுத்தல் : உணவு ட்ரக்கில் மறைந்திருந்து சிறிய விமானத்தில் அமெரிக்கா பறந்த ட்ரம்ப்

Donald Trump Turkey NATO
By Jaso Aug 11, 2026 01:32 PM GMT
Report

ஈரானின் அச்சுறுத்தலை அடுத்து, கடந்த மாதம் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறியபோது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரகசியமாக விமானம் மாறியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள ஓரே இஸ்லாமிய நாடு துருக்கி. துருக்கியில் கடந்த ஜூலை 7 நேட்டோ வருடாந்திர மாநாட்டில் ட்ரம்ப் கலந்துகொண்டார்.

சந்தேகங்களை ஏற்படுத்திய விமானம் மாறுதல்

இதில் பங்கேற்க, கத்தார் பரிசாக வழங்கிய ஏர் போர்ஸ் ஒன் போயிங் 747-8 விமானத்தில் வருகை புரிந்த ட்ரம்ப் அன்றைய தினம் திரும்பிச் செல்லும்போது அந்த புதிய விமானத்தில் ஏறாமல் தனது பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறினார்.

ஈரானின் கொலை அச்சுறுத்தல் : உணவு ட்ரக்கில் மறைந்திருந்து சிறிய விமானத்தில் அமெரிக்கா பறந்த ட்ரம்ப் | Trump Hidden Truck Secret Plane Iran Threat

புதிய விமானத்தில் வந்திறங்கி, புறப்படும் போது திடீரென பழைய விமானத்திற்கு மாறியது சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அவர் அன்றைய தினம் அந்த பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவதுபோல் ஊடகங்களை ஏமாற்றிவிட்டு வேறொரு சிறிய ரக இராணுவ விமானத்தில் துருக்கியில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் போர் உச்சக்கட்டத்தில் இருந்ததும், தான் படுகொலை செய்யப்படுவோம் என்ற அச்சுறுத்தல் காரணமாகவும் ட்ரம்ப் இந்த முறையில் ரகசியமாக பயணித்ததாக கூறப்படுகிறது.

' வோஷிங்டன் போஸ்ட்' வெளியிட்டுள்ள செய்தியின்படி, துருக்கி தலைநகர் அங்காராவில் நேட்டோ மாநாட்டை முடித்துக்கொண்டு புறப்பட்ட ட்ரம்ப், கமராக்களுக்கு முன் தனது பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவது போலக் காண்பிக்கப்பட்டது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பைடனின் புற்றுநோய் தீவிரம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பைடனின் புற்றுநோய் தீவிரம்

ரகசியமாக வெளியேற்றப்பட்ட ட்ரம்ப் மற்றும் அவரது உதவியாளர்கள்

ஆனால், விமானத்திற்குள் சென்ற சில நிமிடங்களில், ஹைட்ராலிக் வசதி கொண்ட விமான நிலைய உணவு டிரக் மூலம் ட்ரம்ப் மற்றும் அவரது உதவியாளர்கள் ரகசியமாக வெளியேற்றப்பட்டனர். அங்கிருந்து அவர் அமெரிக்க இராணுவத்தின் சிறிய C-32A என்ற மாற்று விமானத்திற்கு மாற்றப்பட்டு, இங்கிலாந்தில் RAF Mildenhall விமானத் தளத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.

ஈரானின் கொலை அச்சுறுத்தல் : உணவு ட்ரக்கில் மறைந்திருந்து சிறிய விமானத்தில் அமெரிக்கா பறந்த ட்ரம்ப் | Trump Hidden Truck Secret Plane Iran Threat

அங்கிருந்து அமெரிக்கா சென்றடைந்துள்ளார். ட்ரம்ப் இன்றி பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த பத்திரிகையாளர்கள் மற்றும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களிடம், விமானத்தின் ஜன்னல் திரைகளை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஈரான் எல்லையை ஒட்டிய துருக்கிக்கு ட்ரம்ப் சென்றிருந்த சமயத்தில், ஈரானின் படுகொலை அச்சுறுத்தல் குறித்த நம்பகமான தகவல் அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஈரானிடம் நஷ்டஈடு கோரும் ட்ரம்ப்...! சர்வதேசப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம்

ஈரானிடம் நஷ்டஈடு கோரும் ட்ரம்ப்...! சர்வதேசப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024