மிரட்டும் ட்ரம்ப் : சீனாவிற்கு விதிக்கப்படவுள்ள 100 வீத வரி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் முதல் திகதி முதல் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 100% வரி விதிக்க முடிவு செய்துள்ளார்.
நவம்பர் 1-ஆம் திகதி முதல் சீன இறக்குமதிகளுக்கு ஏற்கனவே உள்ள 30% வரியுடன் கூடுதலாக 100% வரி விதிக்கப்படும். மொத்தமாக சீனப் பொருட்களின் மீது 130% வரி விதிக்கப்பட உள்ளது.
வரி விதிக்க என்ன காரணம்
தனது சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி, தொழில்நுட்ப தயாரிப்புகளுக்குத் தேவையான கனிமங்கள் மீது சீனாவின் கடுமையான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் காரணமாக இதுபோன்ற வரிகளை விதிக்க முடிவு செய்ததாகக் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப தயாரிப்புகளுக்குத் தேவையான 7 கனிமங்களுக்கு சீனா ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அந்த 7 கனிமங்களுடன் மேலதிகமாக 5 கனிமங்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாக சீனா சமீபத்தில் அறிவித்தது.
சீன ஜனாதிபதியுடனான சந்திப்பும் இரத்து
சீனாவின் புதிய முடிவின்படி, தற்போது விதிக்கப்பட்டுள்ள வரிகளுக்கு கூடுதலாக நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதேவேளை சீனாவின் நிலைப்பாட்டை காரணம் காட்டி, ஆசிய-பசுபிக் பொருளாதார மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்க இருந்த திட்டத்தை ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.
சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா "வலுவான எதிர் நடவடிக்கைகளை" எடுக்க தயாராவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
