H-1B விசா கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம் : ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
இலங்கையர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டவர்களும் இனிமேல் அமெரிக்காவில் வதிவிட உரிமை பெறுவதற்கு ஏதுவான எச்-1பி (H-1B ) நுழைவிசைவை (விசா) பெறுவதற்கு ஒரு இலட்சம் டொலர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் வதிவிட உரிமை பெற்றுக்கொள்ளும் கனவுடன் அங்கு பணிக்குச்செல்லும் அனைவருக்குரிய இது ஒரு பாதகமான செய்தியாக அமைந்துள்ளது
அமெரிக்காவில் ஜோபைடன் ஆட்சிக்காலம் முதல் அண்மைய ஆண்டுகளில் H-1B விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற எதிர்ப்பு கொள்கையின் ஒரு அங்கமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கையெழுத்திட்ட ட்ரம்ப்
இதற்குரிய நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் நேற்று (19) கையெழுத்திட்டுள்ளதால் இனிமேல் அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணிபுரியவும் அதன் பிரபலமான வதிவிட உரிமையான கிரீன் கார்ட் உரிமையை எடுக்கவும் விண்ணப்பதாரி ஒருவர் ஒரு இடசம் டொலர் கட்டணத்தை செலுத்தவேண்டும்.
இந்த நடவடிக்கை மூலம் இனிமேல் அமெரிக்கர்களை பணிக்கு வேலைக்கு அமர்த்த அமெரிக்க நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு தொழிலாளர்கள்
குறித்த விடயத்தின் இன்னொரு மேலதிக விடயமாக தனிப்பட்ட ஒருவர் தனக்குரிய H-1B விசா விண்ணப்பங்களை பெறவே இந்த ஒரு இலட்சம் டொலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவே அமெரக்காவில் உள்ள ஒரு நிறுவனம் ஒரு விண்ணப்பதாரியை பணிக்கு அழைத்தால் அந்த நிறுவனம் இதனை விட இரண்டு மடங்காக 2 இலட்சம் டொலரை கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
H-1B ரக விசாக்கள் மூலமே வெளிநாட்டு தொழிலாளர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவதால் ட்ரம்பின் இந்த உத்தரவு வெளிநாட்டவருக்கு பெரும் பாதகமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
