ட்ரம்பின் கொடூர தாக்குதல்: பறிபோன பல உயிர்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) ஏமனின் ஹவுதி படைகளுக்கு எதிராக நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹவுதிகளின் முக்கிய ஆதரவாளரான ஈரானை, அந்தக் குழுவிற்கான ஆதரவை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும் 101 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹவுதி நடத்தும் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனீஸ் அல்-அஸ்பாஹி தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் தாக்குதல்
அதேநேரம், ஹவுதிகளின் அரசியல் பணியகம் இந்த தாக்குதல்களை போர்க்குற்றம் என்று அடையாளப்படுத்தியுள்ளதுடன் யேமன் ஆயுதப் படைகள், தீவிரவாதத்திற்கு பதிலடி கொடுக்க முழுமையாகத் தயாராக உள்ளன என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஹவுதிகளுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள இந்த தாக்குதலானது சில வாரங்கள் நீடிக்கலாம் என்றே அமெரிக்க அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளது.
ஈரானுக்கான எச்சரிக்கை
அத்துடன், ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கை இது என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஈரானை எச்சரித்த ட்ரம்ப், “அமெரிக்காவை ஈரான் மிரட்டும் என்றால், அமெரிக்கா உங்களை முழுமையாகப் பொறுப்பேற்க வைக்கும், அதில் நாங்கள் கடுமையாகவே நடந்துகொள்வோம்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்