வெளிநாடொன்றில் புலம்பெயர் அதிகாரிக்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் வழக்கு தாக்கல்
கடந்த ஆண்டு, ஜேர்மன் (German) தலைநகர் பெர்லினில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2024 ஆம் ஆண்டு, 1,662 பேர், பெர்லின் (Berlin) புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்கள்.
ஜேர்மனியைப் பொருத்தவரை, குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்கள் மூன்று மாதங்களாகியும் தங்கள் விண்ணப்பங்கள் தொடர்பில் எந்த முடிவும் தெரியவரவில்லையானால் வழக்குத் தொடரலாம்.
ஏராளமான குடியுரிமை
இந்தநிலையில், பெர்லின் புலம்பெயர்தல் அலுவலகங்கள், அலுவலர்கள் பற்றாக்குறையாலும் மற்றும் ஏராளமான குடியுரிமை விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளதாலும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கத் திணறிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, ஃபெடரல் மட்டத்தில் இணையம் வாயிலாக இந்த பிரச்சினையை தீர்ப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், அது மொத்தத்தில் 40,000 விண்ணப்பங்கள் தேங்க காரணமாகிவிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புலம்பெயர்தல் அதிகாரி
இந்தநிலையில், தங்கள் தங்கள் விண்ணப்பங்களுக்கு பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாலேயே 1,662 பேர், ஜேர்மன் புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வேகமாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தாலும், இன்னமும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவேண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காரணத்தினால்தான் தங்கள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதை வேகப்படுத்துவதற்காக 1,662 பேர், ஜேர்மன் புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்