வெளிநாடு செல்லவுள்ள இலங்கையர்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு
வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) அறிப்பொன்றை விடுத்துள்ளார்.
இதனபடிப்படையில், வேலைவாய்ப்புக்காக தனியார் முகவர்களின் ஊடாக வெளிநாடு செல்லும்போது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி குறித்த முகவர் தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இதற்குப் பதிலளித்த அமைச்சர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பணியகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பணியகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையர்களுக்கு தொழில் விசாக்களை வழங்குவதற்கு இத்தாலி (Italy) அரசாங்கம் மீண்டும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதி மறுக்கப்பட்ட நாட்டிலிருந்து சென்று நீதி அமைச்சர் பதவி: ஹரி ஆனந்தசங்கரிக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்