நெதன்யாகுவிற்காக மன்னிப்பு வேண்டும் ட்ரம்ப்! அதிர்வலையை கிளப்பிய காரியம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளிலிருந்து அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோர் மீது, அரசியல் உதவிகளுக்குப் பதிலாக 2,60,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசுகளை பெற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக பல ஊழல் வழக்குகள் இஸ்ரேலில் தொடர்கின்றன.
ட்ரம்பின் கோரிக்கை
இந்த பின்னணியில், கடந்த ஒக்டோபரில் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய ட்ரம்ப், நெதன்யாகு மீது தொடரப்படும் வழக்குகள் அரசியல் நோக்கமுடையவை என்றும், அவரை விடுவிப்பது இஸ்ரேலுக்கான நியாயமான முடிவு என்றும் வலியுறுத்தியிருந்தனார்.

Image Credit: BBC
இதன்படி, தற்போது, ட்ரம்ப் எழுதியுள்ள கடிதம் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அவர் குறிப்பிடுவதாவது: “குறைந்தது 3,000 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த அமைதி தற்போது உறுதியாகி உள்ளது.
அந்த அமைதியை நிலைநிறுத்த வலிமையான தலைவராக இருந்தவர் பெஞ்சமின் நெதன்யாகு. அவரை முழுமையாக மன்னிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.”
அரசியல் பழிவாங்கல்
எவ்வாறாயினும், இது குறித்து இதுவரை இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் எந்த உத்தியோகபூர்வ பதிலும் அளிக்கவில்லை.

Image Credit: Brookings Institution
அதே நேரத்தில், நெதன்யாகு மீது தொடரப்படும் வழக்குகள் அரசியல் பழிவாங்கல் என்று அவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
குறிப்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டு காசா போருக்கு முன் இஸ்ரேல் முழுவதும் நெதன்யாகுவுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |