இயேசுவுடன் ஒப்பிட்டு தனது படத்தை வெளியிட்ட ட்ரம்ப்
Donald Trump
United States of America
By Sumithiran
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது 'ட்ரூத்' சமூக ஊடகக் கணக்கில், இயேசு கிறிஸ்துவைப் போலத் தோற்றமளிக்கும் தனது செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
இது ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய புகைப்படத்தில், இயேசுவைப் போல நீண்ட அங்கி அணிந்து, தெய்வீக ஒளியைப் பரப்பும் ட்ரம்ப், ஒரு ஏழைக்கு உதவுவது போலவும், அவரது ஆதரவாளர்கள் தேவதூதர்களைப் போல அவருக்கு அருகில் நிற்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.
புகைப்படத்தின் பின்னணியில் சுதந்திர தேவி சிலை
அந்தப் புகைப்படத்தின் பின்னணியில் சுதந்திர தேவி சிலையைக் காண முடிகிறது, இது அமெரிக்க அடையாளத்தை மேலும் வலியுறுத்துகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்