யுரேனிய செறிவூட்டல் குறைக்கப்படாது! ட்ரம்புக்கு ஈரான் பதிலடி
ஈரான் போர் நிறுத்தம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தைக் குறைக்கப் போவதில்லை என தெஹ்ரான் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி நாட்டின் யுரேனியம் செறிவூட்டும் திட்டம் குறைக்கப்படாது என்று ஈரானின் அணுசக்தித் தலைவர் முகமது இஸ்லாமி தெரிவித்துள்ளார்.
மேலும், "ஈரானின் செறிவூட்டல் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் எதிரி வெற்றி பெற மாட்டார்" என்றும் அவர் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகை நிலைப்பாடு
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வெள்ளை மாளிகை ஒரு நிரந்தர ஒப்பந்தம் உருவாக்கப்படும் வரை, இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்தத்தின் நிபந்தனைகளாக இவை கோரப்பட்டன.

எனினும் அறிக்கையில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு யுரேனியம் செறிவூட்டும் தெஹ்ரானின் உரிமையைப் பாதுகாப்பது 'அவசியம்' என்று அவர் கூறியுள்ளார்.
லெபனானில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல் மற்றும் ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது உள்ளிட்ட புதிய நிகழ்வுகளின் அடிப்படையில், இன்று ஒரு தற்காலிக போர் நிறுத்தம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டதால் பல்வேறு பிற கருத்து வேறுபாடுகள் குறித்து பேச்சுவார்த்தையாளர்கள் ஒருமித்த கருத்தை எட்ட முடியுமா என்ற நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |