வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்தார் கனடிய பிரதமர்
அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் கனடா (Canada) பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு வெள்ளை மாளிகையில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலதரப்பட்ட கருத்துக்கள்
குறித்த சந்திப்பல் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மார்க் கார்னிக்கு இடையில் பலதரப்பட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், டெனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து இரண்டாவது முறையாக மார்க் கார்னி வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடா மற்றும் அமெரிக்கா உறவை வலுப்படுத்துவது, அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம் மற்றும் இஸ்ரேல்-காசா மோதல் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் பலதரப்பட்ட கலந்துரையாடல்கள் இதன்போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
