புடினை அடக்க ட்ரம்ப்பால் மட்டுமே முடியும்...! போலந்து ஜனாதிபதி அதிரடி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திறன் கொண்ட ஒரே தலைவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மட்டுமே என போலந்து ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “போலந்தையும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவையும் ரஷ்யா அச்சுறுத்தி வருகின்றது.
ட்ரம்பால் மட்டுமே இந்த பிரச்னையைத் தீர்க்க முடியும். அதேபோல் உக்ரைன் போரையும் அவரால் முடிவுக்கு கொண்டு வர முடியும்.
அசாதாரண சூழ்நிலை
கடந்த செப்டம்பரில் உக்ரைனில் இருந்து ஆளில்லா விமானங்கள் போலந்திற்குள் நுழைந்தது அசாதாரண சூழ்நிலை.
எந்த ஒரு நேட்டோ உறுப்பு நாடும் இந்த அளவில் ட்ரோன் தாக்குதலை சந்தித்தது இல்லை.

அப்போது டைபூன் ஜெட் விமானங்களை அனுப்பி உதவிய பிரிட்டனுக்கு நன்றி.
ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு இன்னமும் அமெரிக்கா உத்தரவாதம் அளித்து வருகின்றது.
உத்தரவாதம்
போலந்துக்கும் இங்கிலாந்துக்கும் உள்ள உறவானது மிகவும் முக்கியமானது.
போலந்தில் நிலை நிறுத்தப்பட்டு உள்ள பிரிட்டிஷ் வீரர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

அடுத்த ஆண்டு ஜி 20 மாநாட்டை பிரிட்டன் நடத்துகின்றது.
அப்போது போலந்தை பிரிட்டன் அழைக்கும் என்று நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |