கிரீன்லாந்து பிரதமருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க மிரட்டல்...!
கிரின்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடு தவிர்க்க முடியாதது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிரதேசமான கிரீன்லாந்தை ட்ரம்ப், பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா உடன் இணைத்து கொள்ள வேண்டும் என கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், தற்போது கிரின்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடு தவிர்க்க முடியாதது என மீண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது.
குறிப்பாக தான் உருவாக்கி வரும் கோல்டன் டோம் (Golden Dome) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பிற்கு இது அவசியம்.

அமெரிக்கா, கிரீன்லாந்தை கையகப்படுத்த நேட்டோ வழிவகுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் ரஷ்யா அல்லது சீனா அந்தப் பகுதியைக் கைப்பற்றிவிடும் என எச்சரிக்கிறேன்.
கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பெடரிக் நீல்சன் அமெரிக்காவுடன் இணைய மறுத்ததால் அது அவருக்கு பெரிய பிரச்சனையாக மாறும் என்று எச்சரிக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |