இந்திய பிரதமரிடம் ட்ரம்ப் ‘கறாராக’ தெரிவித்த விடயம்
இந்திய பிரதமர் மோடியை (narendra modi)அமெரிக்காவிற்கு அழைத்த ஜனாதிபதி ட்ரம்ப் (trump)இந்திய பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அறுதியாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் சில நாட்களுக்கு முன்னர், வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி என்னை சந்தித்தார். அப்போது, அமெரிக்க பொருட்களுக்கு என்ன வரி விதிக்கப்படுகிறதோ, அந்தளவுக்கு இந்திய பொருட்களுக்கும் வரி விதிப்போம் என்றேன்.
வரி விதித்தால் அதற்கு ஈடாக வரி விதிப்போம்
அதற்கு பிரதமர் மோடி, அப்படி செய்ய வேண்டாம் என்றார். அதனை மறுத்த நான், நீங்கள் என்ன வரி விதிக்கிறீர்களோ, அந்தளவு வரி விதிப்போம். அனைத்து நாடுகளுக்கும் அதனையே செய்கிறேன் என்றேன்.
இந்தியாவில் வரி விகிதம் அதிகமாக உள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் தங்களது பொருட்களை இந்தியாவில் விற்க வேண்டும் என்றால், தங்களது கிளைகளை அங்கு தொடங்க வேண்டும். இது அமெரிக்க பொருளாதாரத்திற்கு அநீதியாக உள்ளது.
என்னுடன் யாரும் வாதிட முடியாது
என்னுடன் யாரும் வாதிட முடியாது. 25 சதவீதம் வரி விதிக்கப் போகிறேன் என்றால், அது மோசம் என்கின்றனர். இனிமேல் நான் எதுவும் கூறப்போவது கிடையாது. ஏனென்றால், நீங்கள் என்ன வரி விதிக்கிறீர்களோ அந்தளவு வரி விதிப்பேன் என ஏற்கனவே கூறியுள்ளேன். என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
