ட்ரம்பின் நோபல் அமைதிப் பரிசு கனவு! கருத்துத் தெரிவிக்க மறுத்த நோபல் குழு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நோபல் அமைதிப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டாரா என்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க நோர்வே நோபல் குழு மறுத்துள்ளது.
நோபல் குழுவின் தலைவர் யோர்கன் வாட்னே ஃப்ரைட்னெஸ், வழங்கிய நேர்காணலில், பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள் குறித்து குழு ஒருபோதும் கருத்துத் தெரிவிப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நோபல் அமைதிப் பரிசு தொடர்பில் ட்ரம்ப் ஏற்படுத்திய அழுத்தங்கள் குறித்தும், நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவுக்கு அவர் ஜனவரி மாதத்தில் எழுதிய கடிதம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
ராஜபக்சக்களின் தமிழ்ப்புலிப் பெண் விளிப்பு நவிக்கு சமாதான நோபல் விருது! அவர்களின் குடும்ப பெண் சிராந்திக்கு..
சர்வதேசச் சட்டத்தின் வளர்ச்சி
இதற்குப் பதிலளித்த ஃப்ரைட்னெஸ், நோபல் குழு நோர்வே அரசாங்கத்தின் ஒரு பகுதி அல்ல என்றும், தமது பணியில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, நவி பிள்ளைக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டமை குறித்துப் பேசிய அவர், சர்வதேசச் சட்டத்தின் வளர்ச்சியில் அவர் ஆற்றிய நீண்டகாலப் பங்களிப்பே இந்த விருதுக்கான முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டார்.
தென்னாபிரிக்காவில் அவரது சட்டத்துறைப் பணிகள், ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஆற்றிய பங்களிப்பு உள்ளிட்ட அவரது ஒட்டுமொத்தப் பணிகளையும் கருத்திற்கொண்டே விருது வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |