பிரசார கூட்டத்தில் திடீரென்று மருத்துவ உதவி கேட்ட ட்ரம்ப்: வெளியான காரணம்
துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின் முதல்முறையாக பொதுவெளியில் உரையாற்றிய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) திடீரென உரையை நிறுத்திவிட்டு மருத்துவ உதவி கோரியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று (22) வடக்கு - கரோலினாவில் (North Carolina) டெனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இடம்பெற்றுள்ளது.
மருத்துவ உதவி
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்குப்பற்றிய ஒருவருக்கு மருத்துவ உதவி தேவை என்று உணர்ந்ததை அடுத்து ட்ரம்ப் தனது உரையை நிறுத்தியுள்ளார்.
Donald Trump in North Carolina.
— Justin Theory (@realJustATheory) August 22, 2024
A woman in the crowd is having a medical emergency, so Trump stops the rally and gives her a hug before she leaves with paramedics.
This is the first time he's used bullet proof glass for an outdoor rally, and he leaves the safety of it. pic.twitter.com/loFT0l5l75
துப்பாக்கி குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் இருந்து உரையாற்றிக்கொண்டிருந்த ட்ரம்ப் குறித்த பெண்ணுக்கு மருத்துவ உதவிகளை வழங்குமாறு வைத்தியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதுடன் பெண் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சென்று அவரின் உடல்நிலை தொடர்பில் விசாரித்துள்ளார்.
மேலும், டொனால்ட் ட்ரம்பின் இந்த செயலானது, பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தவர்களிடையே பெரும் பாராட்டுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |