ஈரானில் ஆட்டம் காணும் அதிகாரம்: போராட்டக்காரர்களுக்கு ட்ரம்பின் பகிரங்க அறிவிப்பு
ஈரான் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை நோக்கியுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவொன்றினை விட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அதற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடி மற்றும் விலை உயர்வு ஆகியவற்றால் ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகின்றது.
ஏற்பட்ட மோதல்களால் வன்முறை வெடித்த நிலையில் ஈரானில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், போராட்டம் கட்டுக்குள் வராமல் தீவிரமடைந்து உள்ளது.
இந்தநிலையில் ஈரானில் போராட்டம்-வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், 2600 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |