ஈரான் அணு திட்டம் முறியடிப்பு...! பேரழிவைத் தடுத்ததாக ட்ரம்ப் அதிரடி உரிமைக்கோரல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து இராணுவத் தாக்குதலைத் தொடங்காமல் இருந்திருந்தால் ஈரான் சில வாரங்களிலேயே அணுஆயுதத்தைப் பெற்று மத்திய கிழக்கை அழித்து அமெரிக்காவை நோக்கியும் தாக்கியிருக்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான் டியேகோ நகரங்கள் குறித்த தனது முந்தைய சர்ச்சை கருத்துக்கள் தொடர்பாகவும் அவர் மீண்டும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், ஈரான் அணுஆயுதத்தை உற்பத்தி செய்வதற்கு வெறும் 3 முதல் 4 வாரங்களே (அல்லது அதற்கும் குறைவாகவே) இருந்ததாகவும் அமெரிக்கா தலையிடாமல் இருந்திருந்தால் அது பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்களின் தமிழ்ப்புலிப் பெண் விளிப்பு நவிக்கு சமாதான நோபல் விருது! அவர்களின் குடும்ப பெண் சிராந்திக்கு..
இராணுவ நடவடிக்கைகள்
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் மூலமே இது தடுக்கப்பட்டதாகக் கூறும் ட்ரம்ப், இதற்குரிய உளவுத்துறை ஆதாரங்கள் எதையும் பகிரங்கமாக வெளியிடவில்லை.

முன்னதாக பிரச்சாரக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், ஈரான் அணுஆயுதம் பெற்றிருந்தால் லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) மற்றும் சான் டியேகோ (San Diego) போன்ற முக்கிய நகரங்களை ஏவுகணைகள் மூலம் தாக்கியிருக்கக்கூடும் எனக் கூறியிருந்தார்.
ஈரான் அணுஆயுதம் ஏந்தி அமெரிக்க நகரைத் தாக்குவதைத் தடுப்பதே முதன்மை நோக்கம் என வெள்ளை மாளிகை விளக்கமளித்த போதிலும், கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் மற்றும் குடியரசுக் கட்சியின் சில பிரதிநிதிகள் உட்பட இருகட்சி தலைவர்களும் ட்ரம்பின் கருத்துக்களுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |