ட்ரம்ப்பின் அதிரடி வேட்டை : ஐஎஸ்ஐஎஸ் மீது வான்வழி தாக்குதல்
அமெரிக்கா (United States) நடத்திய வான்வழி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பினர் சிலர் கொல்லப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் உத்தியோக பூர்வ Truth Social சமூக ஊடக பக்கத்தில் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் தொடர்பில் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளதாவது “சோமாலியாவில் தாக்குதலுக்கு திட்டமிடும் மூத்த ISIS பயங்கரவாதிகள் மற்றும் ஆட்சேர்க்கும் பயங்கரவாத குழுவினரை குறிவைத்து துல்லியமான இராணுவ தாக்குதல் நடத்த இன்று காலை நான் உத்தரவிட்டேன்.”
வான்வழித் தாக்குதல்
அமெரிக்காவையும், நமது நட்பு நாடுகளையும் இந்த பயங்கரவாதிகள் அச்சுறுத்தி வந்தனர். எனவே அவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், அவர்கள் பதுங்கியிருந்த குகைகள் அழிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த நடவடிக்கையின் போது பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவின் இந்த திடீர் வான்வழித் தாக்குதல் யாரையேனும் குறிவைத்து நடத்தப்பட்டதா? அல்லது தாக்குதலின் நோக்கம் வெற்றியடைந்ததா? என்பது போன்ற எந்தவொரு விளக்கமும் டிரம்ப் தெரிவிக்கவில்லை.
இந்த தாக்குதல் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்காவின் இந்த தாக்குதல் சோமாலிய அரசாங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |