ஈரானுடன் சிறந்தமுறையில் நடைபெற்றுவரும் பேச்சுவாரத்தை: ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா ஈரானுடன் “மிக நல்ல பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று(18) சனிக்கிழமை தெரிவித்தார். “நாங்கள் மிக நல்ல பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். அது மிகவும் நன்றாகச் செயல்படுகிறது. 47 ஆண்டுகளாக அவர்கள் செய்து வருவதைப் போலவே, அவர்கள் சற்று தந்திரமாக நடந்து கொள்கிறார்கள். அவர்களை யாரும் ஒருபோதும் எதிர்த்ததில்லை. நாங்கள் அவர்களை எதிர்த்தோம்,” என்று ஓவல் அலுவலகத்தில் ட்ரம்ப் கூறினார்.
“அவர்களிடம் கடற்படை இல்லை, விமானப்படை இல்லை, தலைவர்கள் இல்லை. அவர்களிடம் எதுவுமே இல்லை. உண்மையில்... இது ஒரு ஆட்சி மாற்றம். நீங்கள் இதை வலுக்கட்டாய ஆட்சி மாற்றம் என்று அழைக்கலாம், ஆனால் நாங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
நாங்கள் ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்
“நாங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்... நாங்கள் ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்,” என்று கூறிய ட்ரம்ப், ஈரானுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகள் குறித்து, “இன்றைய நாளின் இறுதிக்குள் சில தகவல்கள் கிடைக்கும்,” என்றும் குறிப்பிட்டார்.

தனது உரையை முடித்த பிறகு, ஈரானுடனான மோதல், பேச்சுவார்த்தைகள் அல்லது ஹோர்முஸ் நீரிணையின்நிலைமை குறித்து ட்ரம்ப் எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |