அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் (America) ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் 47ஆம் ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
வொஷிங்டனில் அமைந்துள்ள கெப்பிட்டல் கட்டடத்தில் இந்த பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
வெளிநாட்டு தலைவர்கள்
இந்நிகழ்வில், வெளிநாட்டு தலைவர்கள், இராஜதந்திரிகள், தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதானிகள், செல்வந்தர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.
இரண்டாவது தடவையாக ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
#ÚLTIMAHORA | Donald J. Trump (@realDonaldTrump) toma protesta como el 47º presidente de los Estados Unidos 🇺🇸. pic.twitter.com/QndbLh7J2f
— Moviendo Ideas (@moviendoideas) January 20, 2025
பிரதம நீதியரசர் ஜோன் ரொபர்ட்ஸ் முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பாகியுள்ளது என ட்ரம்ப் பதவிப் பிரமாண நிகழ்வின் போது தெரிவித்துள்ளதுடன் இன்றைய நாள் முதல் அமெரிக்கா பிரகாசிக்கும் எனவும், உலக நாடுகளில் அமெரிக்காவின் மரியாதை உயரும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |