அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி நாட்டை தகர்க்க தயாரான ட்ரம்ப் : சர்வதேச அரங்கில் பரபரப்பு
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுக்கு ஓமான் ஆதரவளித்தால், அந்நாட்டை தாக்குவோம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானும் வளைகுடா நாடும் நீரிணையை கட்டுப்படுத்த அனுமதிக்கும் ஒரு குறுகிய கால ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்கப்பட்டபோது, "ஓமான் ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும் இல்லையெனில் அவர்களை தகர்த்துவிடுவேன்" என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
அவர்களை தகர்க்க வேண்டியிருக்கும்
"இல்லை, அந்த நீரிணை அனைவருக்கும் திறந்தே இருக்கும்," என்று வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

இது சர்வதேச கடல் பகுதி, ஓமானும் மற்றவர்களை போலவே நடந்துகொள்ளும், இல்லையென்றால் நாங்கள் அவர்களை தகர்க்க வேண்டியிருக்கும். அதை அவர்கள் புரிந்துகொள்வார்கள், அவர்களுக்கு ஒன்றும் ஆகாது.
வெள்ளை மாளிகையிலிருந்து உடனடி பதில் இல்லை
ட்ரம்ப் தவறுதலாகப் பேசிவிட்டாரா அல்லது ஓமானுக்கு பதிலாக ஈரானைக் குறிப்பிட நினைத்தாரா என்று கேட்டதற்கு, வெள்ளை மாளிகை உடனடியாக பதிலளிக்கவில்லை.

அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான ஓமான், மத்திய கிழக்கு போரில் மத்தியஸ்தம் செய்ய முயன்றதுடன், தெஹ்ரானின் தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |