ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பு...! ஈரானுக்கு எதிராக புதிய இராணுவ நடவடிக்கை
ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் மற்றும் ட்ரம்ப்புக்கும் இடையில் சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இராணுவ நடவடிக்கை
இந்த சந்திப்பின் போது ஈரானுக்கு எதிராக புதிய இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதன் அவசியம் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ட்ரம்ப், “ஜூன் மாதம் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் ஈரானின் அணுசக்தித் திறன்கள் முற்றிலும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன.
இப்போது ஈரான் மீண்டும் அதனை கட்டமைக்க முயற்சிக்கிறது என்று நான் கேள்விப்படுகின்றேன். அவர்கள் அப்படிச் செய்தால் நாம் அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டியிருக்கும், நாம் அவர்களைத் தடுத்து நிறுத்துவோம்.
நிறைய முன்னேற்றம்
அவர்களைச் சின்னாபின்னமாக்குவோம், அந்த திட்டத்தை முற்றிலுமாக அழித்துவிடுவோம் ஆனால் அப்படி அவர்கள் செய்ய மாட்டார்கள் என்று நம்புகின்றேன்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை எங்களால் முடிந்தவரை விரைவாக அடைய விரும்புகின்றோம்.

இருப்பினும், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் அத்தோடு பேச்சுவார்த்தையில் நாங்கள் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
மூன்று பிரச்னைகளை ஏற்கனவே தீர்த்துவிட்டோம் அத்தோடு தவறான பிரதமர் இருந்திருந்தால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |