லெபனான் விவகாரம் :இஸ்ரேலுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை
ஐரோப்பிய நாடான பிரான்சில், 'ஜி - 7' உச்சி மாநாடு நடந்து வருகிறது-. மாநாட்டிற்கு இடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதாவது:
லெபனானில் ஹெஸ்பொல்லாவுக்கு எதிராக மிக நீண்ட காலமாக இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இதில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் ஹெஸ்பொல்லா அமைப்பைச் சேர்ந்த ஒருவரை தேடும்பொழுது எல்லாம் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க வேண்டிய அவசியமில்லை. அந்தக் குடியிருப்பில் பொதுமக்கள் தான் அதிகளவில் இருக்கின்றனர்.

இஸ்ரேலால் பெருமளவிலான உயிரிழப்புகளை தவிர்க்க முடியாவிட்டால், அந்தப் பணியை சிரியாவிடம் ஒப்படைத்தால் அவர்கள் ஹெஸ்பொல்லாவை இன்னும் சிறப்பாக கையாளுவர்.
இஸ்ரேல் பிரதமருடன் எனக்கு நல்ல உறவு
சிரியாவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அகமது அல் - ஷரா என்னால் அங்கு கொண்டு வரப்பட்டவர். அவர் நாட்டை மிக விரைவாக ஒன்றிணைத்துள்ளார். அவர் மிகவும் திறமையானவர்.

இஸ்ரேல் பிரதமருடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. அதே சமயம் அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது. ஆகவே, லெபனான் விவகாரத்தில் நெதன்யாகு இன்னும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |