ஈரானின் இராணுவம் முழுமையாக முடக்கப்படும் வரை போர் ஓயாது : ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தமக்கு விருப்பமில்லை என்றும், ஈரானின் இராணுவம் மற்றும் தலைமைத்துவம் முழுமையாக முடக்கப்படும் வரை போர் ஓயாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை ஏர் ஃபோர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போதே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் சாத்தியமான அனைத்துத் தலைவர்களும் கொல்லப்பட்டு, அந்த நாட்டின் இராணுவம் முழுமையாக அழிக்கப்பட்டால், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏராளமான தாக்குதல்கள்
அத்துடன் ஒரு கட்டத்தில், 'நாங்கள் சரணடைகிறோம்' என்று சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன், என்று கூறினார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலிய போர் இரண்டாவது வாரத்தில் நுழைந்ததால், சனிக்கிழமை இஸ்ரேலும் ஈரானும் ஏராளமான தாக்குதல்களை மேற்கொண்டன.
வளைகுடா முழுவதும் கோபத்தைத் தணிக்கும் முயற்சியாக, அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் ஜனாதிபதி அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |