ஈரானிய எரிவாயு வயலை மிகப்பெரிய அளவில் தகர்க்கப்போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீதான தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது என்றும், அதில் அமெரிக்காவுக்கும் கட்டாருக்கும் தொடர்பில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும், ஈரான் மீண்டும் கட்டாரின் திரவ இயற்கை எரிவாயு (LNG) வசதிகளைத் தாக்கினால், அமெரிக்கா ஈரானின் சவுத் பார்ஸ்(South Pars) எரிவாயு வயலை "முன்பு எப்போதும் கண்டிராத அளவு வலிமையான சக்தியுடன்" முழுமையாக அழித்துவிடும் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் குறிப்பிட்ட தாக்குதலைப் பற்றி அமெரிக்காவிற்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரான் கண்டிராத பதிலடி
மேலும் கட்டார் நாடு எந்த வகையிலும் இதில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை, அது நடக்கப்போகிறது என்பது பற்றியும் அதற்கு எந்த எண்ணமும் இருக்கவில்லை," என்று ட்ரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன் ஈரான் கண்டிராத, பார்த்திராத அளவு வலிமையான பதிலடி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் நாங்கள் இதுபோன்ற பெரும் அழிவை விரும்பவில்லை என்றும் ஈரான் தான் இதைத் தவிர்க்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |