அமெரிக்கா மீது வரி விதிக்கும் நாடுகளுக்கு ட்ரம்பின் அதிரடி எச்சரிக்கை
அமெரிக்கா (United States) மீது கூடுதல் வரி விதித்தால் அதே அளவு வரியை மற்ற நாடுகள் மீதும் விதிப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த வாரம் அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை அடையாளம் கண்டு, இந்தியாவுக்கு (India) நாடு கடத்தினார்.
அமெரிக்காவிற்குள் இறக்குமதி
இந்த விவகாரம் முடிவதற்குள் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியத்துக்கு 25 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அறிவித்த ட்ரம்ப் இந்த புதிய வரி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார்.
இந்தநிலையில். எந்த நாடு தங்கள் மீது கூடுதல் வரி விதித்தாலும் அந்த நாடுகள் மீது அமெரிக்கா அதே அளவு வரி விதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கார்கள் மீதான வரி
மற்ற நாடுகளில் கார்கள் மீதான வரி அதிகம் உள்ள நிலையில் அமெரிக்காவில் கார்கள் மீதான வரி வெறும் இரண்டரை விழுக்காடு மட்டுமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், பதில் வரி முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ட்ரம்ப் இறுதி முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)