வெனிசுலா மீதான மற்றுமொரு தாக்குதல்! ட்ரம்பின் கடும் எச்சரிக்கை - அதிகரிக்கும் பதற்றம்
அமெரிக்காவுக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் வெனிசுலா இடைக்கால அரசு மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
போதைப் பொருள் கடத்துவதாக குற்றஞ்சாட்டி, தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் இருவரையும் அமெரிக்க படைகள் கைது செய்துள்ளது.
இதையடுத்து, அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள், நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இடைக்கால ஜனாதிபதி
இந்தநிலையில், வெனிசுலாவின் துணை ஜனாதிபதியான டெல்சி ரோட்ரிக்ஸ், அந்த நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
அமெரிக்காவுக்கும் மற்றும் வெனிசுலாவுக்கும் இடையே ஒரு சமநிலையான மற்றும் மரியாதைக்குரிய உறவுக்கு தாங்கள் முன்னுரிமை தர விரும்புவதாக டெல்சி தெரிவித்திருந்தார்.

அத்தோடு, இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் டெல்சி அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், “அமெரிக்காவுடன் வெனிசுலா இடைக்கால அரசு ஒத்துழைக்காவிட்டால் மதுரோவை விட பெரிய தண்டனையை அவர் சந்திக்க நேரிடும்.
தேவைப்பட்டால் வெனிசுலா மீது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம்.
வெனிசுலாவின் எண்ணெய் மற்றும் இதர இயற்கை வளங்களை முழுமையாக அணுகுவது அமெரிக்காவுக்கு அவசியம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |