இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தமா..! பெஞ்சமின் நெதன்யாகுவின் முடிவுக்குப்பின் இருக்கும் உண்மை(காணொளி)
இழுபறிகள், தாமதங்கள் இருந்தாலும் யுத்த நிறுத்தமொன்றை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றது இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான யுத்தம்.
குறிப்பாக கூறப்போனால் இன்று ஆரம்பிக்கப்படலாம் என்றிருந்த தற்காலிக யுத்த நிறுத்தம் தாமதமாவதற்கு காரணம் ஹமாஸ் மற்றும் காசாவில் இருக்கின்ற ஆயுதக் குழுக்களே தவிர இஸ்ரேல் அல்ல.
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை தவிற அங்கு செயற்பட்டு வரும் வேறு சில ஆயுதக் குழுக்களும் இஸ்ரேலில் இருந்து ஐம்பதற்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை கடத்திச் சென்று வைத்திருப்பதாகவும் அவர்கள் வசம் இருக்கின்ற பணயக் கைதிகளை விடுவிப்பதிலுள்ள சிக்கல் காரணமாகவே இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் கைச்சாத்திடப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில், ஹமாஸை அழித்தொழிக்கும் வரை யுத்த நிறுத்தம் என்ற பேச்சிக்கே இடமில்லை என்று அறிவித்திருந்த இஸ்ரேல், தற்பொழுது ஒரு யுத்த நிறுத்தத்தை நோக்கி நகர்வதற்கான காரணம் என்ன?
இஸ்ரேல் - ஹமாஸ் யுத்த நிறுத்தத்தின் பின்னணியில் இருக்கின்ற காரணம் என்னவென்பது குறித்து விரிவாக மற்றும் விளக்கமாக எடுத்துக் கூறுகிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |