செம்மணியில் மறைக்கப்பட்ட உண்மைகள் : நீதிக்கான போராட்டத்திற்கு அழைப்பு!
யாழ்ப்பாணம் - செம்மணிப் புதைகுழி மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சோமரத்ன ராஜபக்ச தெரிவித்த அதிர்ச்சியளிக்கும் கருத்துக்கள் தொடர்பில், தமிழர்களின் அடுத்தகட்ட தந்திரோபாய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் - நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் இன்று (07) இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
சிவில் அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு
இதன்போது எட்டப்பட்ட ஒருமித்த தீர்மானத்தின்படி, செம்மணியில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவும் மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17.11.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு செம்மணி பகுதியில் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் அரசியல் உணர்வும் சமூகப் பொறுப்பும் கொண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |