சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: ஜெனீவாவில் முறையிட நடவடிக்கை!
சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மறுப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் குறித்த விடயம் தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியங்களிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
இழுபறி நிலைமை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
இதற்கான தேவையான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற வழக்குகளைப் பாதிக்கக்கூடிய சில விடயங்கள் பிரேரணையில் உள்ளடங்கியுள்ளதாகக் கூறி இந்த விவாதத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்தநிலையில் அத்தகைய விடயங்கள் எதுவும் பிரேரணையில் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பிரேரணையை திருத்தியமைத்து சமர்ப்பிக்க எக்காரணம் கொண்டும் தயார் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த இழுபறி நிலைமை காரணமாக சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |