கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சிறிலங்கா பொதுஜன பெரமுன; பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை!
நாட்டில் நாளுக்கு நாள் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களது கட்சியினை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
அந்தவகையில், வருகின்ற தேர்தலுக்காக, பிளவுபட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினை ஒன்றிணைத்து பலப்படுத்தும் முயற்சியில் அந்த கட்சி ஈடுபட்டுள்ளது.
கூட்டணி உருவாக்கும் முயற்சி
இலங்கையில் விரிவுபடுத்தப்பட்ட அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஈடுபட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சி உட்பட 15 கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை விரைவில்
மேலும், புதிய அமைச்சரவை தொடர்பிலும் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

