சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் செயலிழப்பு: குற்றம் சுமத்தும் மக்கள்
காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும் அவை செயலிழந்துள்ளதாக மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
சுமத்ரா தீவுகளை அண்மித்த கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நேற்று (30) காலை இலங்கைக் கடற்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் இலங்கையின் கரையோரப் பகுதி பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நேற்றைய தினம் காலை 10.49 மணியளவில் வடக்கு சுமத்ரா தீவு கடற்பரப்பில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக இலங்கையின் கரையோர மக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் அறிவித்திருந்தது.
சுனாமி எச்சரிக்கை
எவ்வாறாயினும், ஆய்வுகளின் பின்னர், நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம், கரையோரப் பகுதிகளில் மக்கள் இயல்பு வாழ்க்கையை வாழ முடியும் என தெரிவித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும் அவை செயற்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |