விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை : பிரேமலதாவின் கோரிக்கை!
மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்குமாறு தமிழக அரசிடம் தேமுதிக பொதுச் செயலாளரும், அவரின் மனைவியுமான பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.
கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று அவரது குடும்பத்தினர் மரியாதை செலுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பேசிய பிரேமலதா, விஜயகாந்தின் நினைவிடத்தில் தினந்தோறும் பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் அஞ்சலி
அத்துடன், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் குறித்த இடத்தில் அஞ்சலி செலுத்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தின் பேது பாரிய ஒத்துழைப்பு வழங்கிய தமிழக அரசு, முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன், நேரிலும், தொலைபேசி மூலமாகவும் இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் தலைவணங்கி நன்றித் தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிலை மற்றும் மணிமண்டபம்
மேலும், தமது கணவரான விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்குமாறு தமிழக அரசிடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை தமிழக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என நம்புவதாக பிரேமலதா மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |