தனியார் கல்விநிலையங்கள் ஆரம்பம் -வெளியான அறிவிப்பு
reopen
Asela Gunawardena
tuition
By Sumithiran
நாட்டில் கொரோனா தொற்றை அடுத்து கல்விச் செயற்பாடுகள் முற்று முழுதாக முடங்கியிருந்தன. தற்போது கொரோனா தொற்றின் வீதம் குறைவடைந்த நிலையில் ஆரம்ப பாடசாலை செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி தரம் 10,11 மற்றும் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு இன்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் கல்விப்பொதுதராதர சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் 50 சதவீத மாணவர் கொள்ளளவுடன் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேலகுணவர்தன (Asela Gunawardena)தெரிவித்துள்ளார்.

