அவசரமாக தரையிறக்கப்பட்ட துருக்கிய விமானம்...!
Turkey
Flight
World
By Shalini Balachandran
துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா எல் பிராட் விமான நிலையத்தில் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
வெடிக்கும் தன்மையுடைய வயர்லெஸ் இணைய வலைப்பின்னல் ஒன்றை பயணி ஒருவர் கண்ட நிலையிலேயே குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
காவல் படை
இஸ்தான்புல்லில் இருந்து புறப்பட்ட விமானம் பார்சிலோனாவில் உள்ள அதன் இலக்கை நெருங்கிக் கொண்டிருந்த போதே குறித்த பயணி இதனை கண்டறிந்துள்ளார்.

இதையடுத்து விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விமான நிலையம் வழக்கம் போல் இயங்குவதாக ஸ்பெயினின் சிவில் காவல் படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி