ஈரானுக்கான அனைத்து விமானங்களையும் இடைநிறுத்திய வெளிநாடு
துருக்கிய ஏர்லைன்ஸ், (Turkish Airlines) ஈரானுக்கான (Iran) அனைத்து விமானங்களையும் இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பானது, நேற்றையதினம் (02) வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஈரானில் பல இடங்களுக்கு திட்டமிடப்பட்ட விமான சேவைகள் இன்று (03) சனிக்கிழமை வழமைக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்மாயில் படுகொலை
இஸ்ரேலுக்கும் (Israel) ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இஸ்மாயில் ஹனியேவை (Ismail Haniyeh) இஸ்ரேல் (Israel) கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல் ஒன்று நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |