மின்சார நெருக்கடிக்கு வெளியான தீர்வு
Mahinda Amaraweera
solution
power crisis
By Jaso
மின்சார நெருக்கடிக்கு தீர்வாக பகலில் பயன்படுத்தப்படும் மின்விளக்குகளின் எண்ணிக்கையை 50 வீதத்தால் குறைக்குமாறு தனது அமைச்சு மற்றும் அதனைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது பாரிய மின் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரச நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அமரவீர குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, இன்று ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்திருந்த போதிலும் சில பிரதேசங்களில் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்