விசாரணைக்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டார் விஜய்
கடந்த ஆண்டு செப்டம்பா் 27 ஆம் திகதி கரூரில் த.வெ.க தலைவா் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் பலியாகினர்.
இது தொடர்பான வழக்கை விசாரிக்க சி.பி.ஐ-க்கு இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.
பல்வேறு தரப்பினரிடம் விசாரணை
கரூர் சம்பவத்தை அடுத்து அங்கு தங்கியிருந்த சி.பி.ஐ அதிகாரிகள் த.வெ.க நிர்வாகிகள், தமிழக அரச அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் த.வெ.க பொதுச் செயலாளா் ஆனந்த், தோ்தல் தலைமைப் பொதுச் செயலாளா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச் செயலாளா் நிா்மல் குமாா், கரூா் மாவட்டச் செயலாளா் மதியழகன் ஆகியோா் நேரில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டது.
விஜய்க்கு அழைப்பு
இதையடுத்து, கடந்த டிசம்பர் இறுதியில் நேரில் முன்னிலையான த.வெ.க நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் மூன்று நாள்கள் தொடர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், வழக்கு விசாரணையின் இறுதிகட்டமாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் வருகின்ற 12 ஆம் திகதி த.வெ.க தலைவர் விஜயை நேரில் முன்னிலையாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |