ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் புதிய செக்...! IRGC வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வதற்குத் தங்களது அனுமதியைப் பெறுவது கட்டாயம் என ஈரானியப் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படைத் தலைமையகம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் இந்த முக்கிய நீர்வழிப் பாதையைக் கையாள்வது தொடர்பாக ஈரான் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
லெபனான் போர்நிறுத்த நடைமுறை மற்றும் போர்க்களத்தில் ஏற்பட்டுள்ள தற்காலிக அமைதிச் சூழலுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறை
IRGC வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சரக்கு மற்றும் டேங்கர் கப்பல்கள் ஈரான் நிர்ணயித்துள்ள ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தின் (Designated route) வழியாக மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும்.

மேலும், இந்தப் பாதையைப் பயன்படுத்தும் அனைத்துக் கப்பல்களும் IRGC கடற்படையிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பிற நாடுகளின் போர்க்கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும் ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |