அலறும் திமுக: தனி விமானத்தில் புறப்பட்ட விஜய்…! நாமக்கல்லில் குவியும் மக்கள்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் (Vijay) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட்களில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் மேற்கொள்ளும் சனிக்கிழமை சுற்றுப்பயணம் பெரும் பேசுபொருளாகி வருகிறது.
விஜயின் அரசியல் வரவும் பெருகும் மக்கள் ஆதரவு ஆளும் திமுக மற்றும் அதிமுக மட்டுமின்றி ஆரம்பத்தில் ஆதரவு வழங்கி சீமானின் அரசியலில் எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது இந்திய அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்.
குவிந்து வரும் பொதுமக்கள்
இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தவெக தலைமை நிலையச் செயலகம் X தள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
— TVK Party HQ (@TVKPartyHQ) September 26, 2025
அனைவருக்கும் வணக்கம்.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (27.09.2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
இந்த மக்கள் சந்திப்பு…
மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், வெற்றித் தலைவரின் சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் என்றும் தவெக தலைமை நிலையச் செயலகம் தெரிவித்துள்ளது.
முதலில் நாமக்கல் மாவட்டம் கே எஸ் திரையரங்கம் முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதையொட்டி காலை முதலே இந்த பகுதிக்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களும் குவிந்து வருகின்றனர்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
