தமிழகத்தில் முதலிடம் பிடித்த விஜய்
தமிழக அரசியல்வாதிகளுக்கிடையே சமூக வலைதளங்களில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட பட்டியலில் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் (TVK Vijay) முதலிடத்தை பிடித்துள்ளார்.
விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி “உங்கள் விஜய் நான் வரேன்” என்ற கோஷத்துடன் மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
விஜயின் கூட்டங்களுக்கு மக்கள் அலை கடலென திரண்ட ஆதரவளித்து வருகின்றனர். விஜய்க்காக குவிந்த கூட்டம் தான் தற்போது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
தமிழ் அரசியல்வாதிகளில் முன்னிலை
விஜய்யின் அரசியல் நகர்வுகள் ஆளும் திமுகவுக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்படுத்தி உள்ளதுடன் தமிழக அரசியலில் பாரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களைக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பில் அண்மையில் ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வில் நடிகர் விஜய் முதல் இடத்தைப் பெற்றுள்ளார் . நடிகர் விஜயை Instagram இல் 1.46 கோடி பேரும் Facebook க்கில் 77 லட்சம் பேரும் X தளத்தில் 55 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.
அந்தவகையில் சராசரியாக 93 லட்சம் பேர் விஜயை பின்தொடர்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.
அரசியல் ஆதரவு அல்லது வாக்குகள்
அதே சமயம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மொத்தமாக 30 லட்சம் பேரும் எடப்பாடி பழனிசாமியை 2.95 லட்சம் பேரும் , அண்ணாமலையை 10.25 லட்சம் பேரும் , உதயநிதி ஸ்டாலினை மொத்தம் 16.25 லட்சம் பேரும் பின்தொடர்கவதாகத் தெரிய வந்துள்ளது.
எவ்வாறு இருப்பினும் சமூகவலைதளங்களில் அதிக பின்தொடர்பவர்கள் இருப்பது அரசியல் ஆதரவு அல்லது வாக்குகள் என்பதைக் குறிக்காது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
