யாழில் சோக சம்பவம்: பிறந்தவுடன் உயிரிழந்த இரட்டை குழந்தைகள்
யாழில் (Jaffna) பிறந்து சிறிது நேரத்தில் இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
நிமலராஜ் சாருமதி தம்பதிகளின் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த தம்பதியினர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதனா வைத்தியசாலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைகளின் தாயாருக்கு கடந்த 21ஆம் திகதி இரவு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அறுவைச் சிகிச்சை
இதன்பின்பு, அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்த நிலையில், பெண் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
அத்தோடு, ஆண் குழந்தை உயிருடன் பிறந்த நிலையில் 45 நிமிடங்கள் கழித்து உயிரிழந்துள்ளது.
குழந்தைகளின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
