யாழ். நகரில் நகைக் கடையில் நடந்த கொள்ளை - இராணுவ புலனாய்வு பிரிவினர் அதிரடி கைது

CID - Sri Lanka Police Jaffna Crime Branch Criminal Investigation Department Crime Gold
By Thulsi Jan 19, 2025 07:18 AM GMT
Report

யாழில் (Jaffna) உள்ள நகைக் கடைக்குச் சென்று நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தில் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் வழிகாட்டலுக்கமைய யாழ்ப்பாண குற்றவிசாரணை காவல்துறை பொறுப்பதிகாரி கலும் பண்டாரா தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

பிரதான சூத்திரதாரி

பிரதான சூத்திரதாரி சுன்னாகம் பகுதியில் நேற்று முன்தினம் ஐந்து இலட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டார்.

யாழ். நகரில் நகைக் கடையில் நடந்த கொள்ளை - இராணுவ புலனாய்வு பிரிவினர் அதிரடி கைது | Two Arrested Robbery At Jaffna Gold Jewellery Shop

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து குறித்த செயலுக்கு உடந்தையாக இருந்த வான் சாரதி உள்ளிட்ட மூவர் கண்டியில் கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்த நிலையில், கொழும்பில் வைத்து இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

யாழில் வீசிய பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்ட கூரைகள்

யாழில் வீசிய பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்ட கூரைகள்

காவல்துறை புலனாய்வு பிரிவு

அண்மையில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குச் சென்ற குழுவொன்று காவல்துறை புலனாய்வு பிரிவு (சிஐடி) என தெரிவித்து 30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றது.

யாழ். நகரில் நகைக் கடையில் நடந்த கொள்ளை - இராணுவ புலனாய்வு பிரிவினர் அதிரடி கைது | Two Arrested Robbery At Jaffna Gold Jewellery Shop

குறித்த சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.

விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செய்திகள் - பிரதீபன்

யாழில் போராட்டத்தில் குதிக்க தயாராகும் ஆசிரியர் சங்கம்

யாழில் போராட்டத்தில் குதிக்க தயாராகும் ஆசிரியர் சங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

  

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026