காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் : இருவர் கைது
குருநாகல் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் பணிகளில் ஈடுபட்ட இருரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குருநாகல், உடவல்பொல பிரதேசத்தில் உள்ள பெரிய வீடொன்றின் அறை ஒன்றில் புதையல் தோண்டிய ஆண் மற்றும் பெண் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
காவல்துறையினர் அந்த வீட்டை சோதனையிட்டபோது, அறையின் ஒரு பக்கத்தில் சுமார் 6 அடி அகலமுடைய 10 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டிருந்தாகவும் தோண்டப்பட்ட மண் அங்கு குவிக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட 500,000 ரூபாய்க்கும் அதிக பெறுமதியான உபகரணங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் குருநாகல் உடவல்போ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஆண், ஹட்டன் டிக்கோயா பகுதியில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடம்பரமாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டைச் சுற்றிலும் காணப்பட்ட சுவர்கள் மற்றும் பிரமாண்ட வாயில்களைப் பயன்படுத்தி அகழ்வு மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.