தமிழர் பகுதியில் பெருந்தொகை மாட்டிறைச்சியுடன் இருவர் கைது
வவுனியா (Vavuniya) - நெளுக்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட 4 ஆம் கட்டை பகுதியில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் இருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் காவல்துறை தெரிவித்துள்ளது.
நெளுக்குளம் காவல் நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போதே மேற்படி கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது அந்த பகுதியில் பயணித்த பட்டா ரக வாகனத்தில் காணப்பட்ட கொள்கலன்களில் 128 கிலோ மாட்டிறைச்சியினை முறையற்ற முறையில் கொண்டு சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை
இதனையடுத்து, குறித்த வாகனத்தினை காவல்துறையினர் கையப்படுத்தியதுடன், வாகனத்தின் சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் கையப்படுத்தப்பட்ட 128 கிலோ மாட்டிறைச்சி உட்பட பட்டா ரக வாகனம் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக நெளுக்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |