காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல்: யாழில் கைதான இருவர்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Businessman
Drugs
By Jaso
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்(22) போதை மாத்திரை வியாபாரி ஒருவரும் சந்தேகநபர் ஒருவருமென இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 110 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டன.
யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண காவல்துறை போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்